Recipes

ராஜபாளையம் பக்கோடா குழம்பு| Pakkoda Kulambu Receipe in Tamil

பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் பக்கோடா அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பக்கோடா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

மிக்ஸ்டு காய்கறி கூட்டு | Mixed Vegtable Koottu Recipe in Tamil

பொதுவாக தினமும் ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுவார்கள் ஆனால் இன்று நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளை சேர்த்து சமைத்து கூட்டு செய்ய போகிறோம். இதை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் இதன் சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் காரசாரமாக அட்டாசமான சுவையில் இருக்கும். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இனி மறுநாள் கூட்டாக அந்த காய்கறி சமைக்கலாமா இந்த காய்கறிகளை சமைக்கலாமா என்று யோசிக்காமல் மொத்த காய்கறிகளும் ஒன்றாக சேர்த்து இதை சமைத்து விடுங்கள்.

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் | Ponnankanni Sambar In Tamil

பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்டசாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய சாம்பார் வைக்கும் முறையிலேயே, இந்த பொன்னாங்கண்ணிகீரை சாம்பார் வைக்க வேண்டும்.சின்ன சின்ன குறிப்பை கடைபிடித்து சாம்பார் வைத்தீர்கள் என்றால், இதன் சுவை கொஞ்சம்அதிகமாகவே கூடும். பொன்னாங்கண்ணி சாம்பார் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kulambu

பெரும்பாலும் மதிய உணவுக்கு சாம்பார், காரக்குழம்பு என சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது பருப்பு உருண்டை குழம்பு செய்துபாருங்கள். இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி வகையை சேர்ந்த டிஷ். கடலைப் பருப்பு, துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை அரைத்து உருண்டை பிடித்து குழம்பாக செய்து கொடுப்பது சுவையோடு தேவையான சத்துக்களும் கிடைக்கும். இக்குழம்பினை சாதத்தில் ஊற்றி உண்ணும் போது தனியாக பொரியலோ, கூட்டோ செய்யத் தேவை இல்லை. இதில் உள்ள பருப்பு உருண்டைகளையே தொட்டுக்கறியாக உண்ணலாம்.

குட்டி உருளைக்கிழங்கு வறுவல் | Baby Potato Fry Recipe In Tamil

காய்கறிகளில்பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்குதான். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்குவறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். அவ்வகையில் குட்டி உருளைகிழங்கை வைத்து தான்ஒரு வறுவல் செய்து பார்க்க போகிறோம். நீங்கள் எப்போதும் செய்யும் அளவில் செய்தாலும்நிச்சயம் பத்தவே பத்தாது. இதன் சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறுசெய்ய வேண்டும் என்று பார்ப்போம்

சேமியா வாங்கிபாத் | Semolina vaangi bath Recipe In Tamil

சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள்.பல பேரின் வீட்டில் சேமியா உப்புமா என்பது பிடிக்காத உணவாக  உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் சேமியா வாங்கிபாத் தயார் செய்வது எப்படி என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.  வாங்கிபாத், கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய், சேமியா,  மசாலாவுடன் சேர்த்து தயாரிக்கலாம். சேமியா வாங்கிபாத் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி. ஆகும். இதனை தயிர் பச்சடி உடன் பரிமாறலாம்.