Recipes

கத்தரிக்காய் சுக்கா | Brinjal Chukka Recipe In Tamil

உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான, ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம்.

ராகி பால்ஸ் | Ragi Balls Recipe In Tamil

டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தகைய ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்று ராகி பால்ஸ். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே ஆகும். ஒரு முறை சாப்பிட்ட பிறகு, தினமும் சிற்றுண்டி உணவாக சாப்பிட விரும்புவீர்கள். சுத்தமான வீட்டில் தயாரிக்கும் நெய்யில் செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.

ஆட்டுக்கால் பாயா | Mutton Leg Paaya Recipe in Tamil

சைவ உணவைவிடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டுஇறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்கமுடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இதை செமி கிரேவியாகவும் செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். ட்ரையாக வறுத்துசெய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒருஅசைவ உணவான ஆட்டுக்கால் குழம்பினை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்வாருங்கள்.

தர்பூசணி துளசி ரசம் | Watermelon Basil Rasam Recipe In Tamil

தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். நம் வாழ்வில் விதவிதமான ரசத்தை உணவில் சேர்த்திருப்போம் ஆனால் தர்பூசணி ரசம் ரெசிபி ஒரு வித்தியாசமான ரெசிபி. தர்பூசணி ஒரு அற்புதமான கோடை பழம் மற்றும் இந்த ரசம் ரெசிபி உங்கள் சமையலறையில் இந்த பருவத்தில் முயற்சிக்க வேண்டும். இந்த தர்பூசணி ரசம் லேசான இனிப்பு, காரமான மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இது எளிதானது மற்றும் உங்கள் தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து மகிழலாம். இது அருந்துவதற்கு அருமையாக இருக்கும், மேலும் இதை தயாரிக்க குறைவான பொருட்கள் தேவைப்படுகின்றன.

கார சட்னி | Kara Chutney Recipe In Tamil

பொதுவாக ரோட்டுக்கடைகளில் இட்லி, தோசைகளுக்கு தரப்படும் கார சட்னி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் எப்படி செய்வதென்று தெரியாமல் எப்பொழுதும் தக்காளி சட்னி, அல்லது தேங்காய் சட்னி தான் செய்து சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடை கார சட்னி சுவையில் நம் வீட்டிலேயே சட்டுனு கார சட்னி செய்து விடலாம்.இந்த கார சட்னி செய்து சுட சுட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த கார சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.