Recipes

வாழைப்பூ கூட்டு | Banana Flower Kootu Recipe In Tamil

வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவைகூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பிஉண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டுஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால்,வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். இந்த சத்துமிக்கவாழைப்பூ கூட்டு உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது செய்துகொடுங்க. வாங்க அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe in Tamil

பாம்பே சட்னி எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடியது. பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசைக்கு பாம்பே சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பாம்பே சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

குடல் மிளகு வறுவல் | Mutton Boti Pepper Fry Recipe In Tamil

பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம். இந்த ஆட்டு குடல் மிளகு வறுவலை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள்.

பூண்டு இட்லி பொடி | Garlic Idli Powder Recipe In Tamil

பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி. இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம், இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம், ஒரே மாதிரி இட்லி பொடியை சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான பொடி வகைகள் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு விரும்பாத மக்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, சுவையான பூண்டு பொடியை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.