Recipes

தூதுவளை சாதம் | Thoothuvalai Sadam Recipe in Tamil

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும், தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். சளி, இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.

கல்யாண பிரிஞ்சி சாதம் | Marriage Style Brinji Rice Recipe in Tamil

நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும். சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதிலும் குறிப்பாக கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி சாதம் சூப்பரான சுவையில் இருக்கும். பலருக்கும் கல்யாண பிரிஞ்சி தான் ஃபேவரெட்.

முட்டை குழம்பு | Egg Curry Recipe In Tamil

முட்டை குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அதுவும் ஹோட்டலில் தரப்படும் முட்டை குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் அதே சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எப்படி முட்டை குழம்பு செய்வதென்று தான் பார்க்க போகிறோம்.இந்த முட்டை குழம்பு செய்து சுட சுட சாதம், சப்பாத்தி, தோசை போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் அற்புதமாக இருக்கும்.இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மொச்சை கருவாட்டு குழம்பு | Mochai Karuvattu Kulambu Recipe in Tamil

சண்டே என்றாலே மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாறுதலுக்கு கருவாட்டு குழம்பு செய்து கொடுங்கள். அப்புறம் வாரம் வாரம் அதைதான் வீட்டில் உள்ளவர்கள் செய்ய சொல்லுவார்கள். இன்றும் தென் மாவட்டங்களில் அதிகமாக கருவாட்டு குழம்பைதான் வைத்து சாப்பிடுவார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட. பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு என்றால் கொள்ளை பிரியம். அதிலும் அந்த கருவாட்டு குழம்பை சமைத்து, மறுநாள் சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.

பேரிச்சம்பழம் மில்க் ஷேக் | Dates Milkshake Recipe in Tamil

பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான பேரிச்சம்பழம் கொண்டு செய்யப்படும் பேரிச்சம்பழம் மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள். மில்க் ஷேக்குகள் குழந்தைகளுக்கு பரிமாறும் சுவையான மற்றும் ஆரோக்கியமான செய்முறையாகும்.