ஆப்பிள் பணியாரம் | Apple Paniyaram Recipe in Tamil
தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி பக்கம் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் மாலை நேர டிபன் தயார் செய்யப்படும். ஒரு 5 மணிபோல் சரியாக, டீ குடிப்பதற்கு முன்பு சுடசுட பணியாரம் மாலை நேர டிபனில் இடம்பெறும்.