Recipes

சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு | Seppankilangu Puli Kulambu Recipe In Tamil

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு ஆகும். இது வெள்ளை சாதம் அல்லது இட்லி, தோசை போன்றவற்றுக்கு பக்க உணவாக பரிமாறக்கூடிய மிகவும் எளிமையான மற்றும் எளிதான குழம்பு. நம்முடைய பாட்டிகள் வைப்பது போலவே பாரம்பரிய முறையில் சூப்பரான சேப்பங்கிழங்கு புளி குழம்பு முறையாக வைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

மணத்தக்காளி கீரை கூட்டு | Manathakkali greens Kootu

உடல் ஆரோக்கியம் பெற சத்தான கீரை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரை வகைகளை எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு மணத்தக்காளிக்கீரை நமது உடம்பிற்கு மிகுந்த சக்தி அளிக்கக்கூடியதாகும். இதில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திற்கும் இது தீர்வாக அமைகிறது. கீரையை தினமும் உணவுடன் கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ரோட்டு கடை சிக்கன் பக்கோடா | Roadside Chicken Pakoda Recipe In Tamil

சிக்கன் பக்கோடா என்றாலே, நாவில் எச்சில் ஊறும். வீட்டில் அதை செய்யத் தெரியாமல் தான் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்குச் சென்று சிக்கன் பக்கோடா வாங்குவோம். பொதுவாக நாம் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பக்கோடா சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பக்கோடா என்று இதுபோன்ற ஒரே ரெசிபியினை செய்து சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான சிக்கன் பக்கோடா செய்து பாருங்கள்.

பச்சைப்பயறு மசியல் | Green Moong Dal Gravy Recipe in Tamil

பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற்பண்புகள் நிறைந்த பச்சை பயிறு புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பயிறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த பச்சை பயறு மசியல் உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது அதுமட்டுமின்றி தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.