Recipes

Recipe Image
கேரளா சின்னமுள்ளன்மீன் குழம்பு | China Mullan Fish Curry

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் உணவு வகைகளுக்குத் தனி வரலாறு உண்டு. அதிலும் கேரளா மாநிலத்தின் வட்டார உணவுகள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன. கேரளாவில் கடற்கரை அதிகம் இருப்பதால் மீன் உணவுகள் அவர்களின் பிரதான உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன. கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிர்க்க முடியாத ஒன்று.