Recipes

Recipe Image
ரசம் சாதம் | Rasam Sadham Recipe In Tamil

ரசம் சாதம் இது போன்று குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். மழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இது போன்று ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த சாதத்துடன் வத்தல், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அற்புதமாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் சுலபம், குறைந்த நேரத்தில் அதுவும் குக்கரில் சட்டுனு செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipe Image
அய்யர் வீட்டு சாம்பார் சாதம் | Iyyer Veetu Sambar Sadam Recipe in Tamil

அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று நாம் அய்யர் வீட்டு ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்ய போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்து பாருங்கள் அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

Recipe Image
கேரளா விரால் மீன் குழம்பு | Kerala Viral Meen Kulambu Recipe in Tamil

ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது. நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்… அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க.

Recipe Image
மதுரை ஜிகர்தண்டா | Madurai Jiagarthanda Recipe in Tamil

மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப்பதற்கு மதுரைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதுரை ஸ்டைலில் ஜில் ஜில் ஜிகர்தண்டா நீங்கள் வீட்டில் வைத்தே எளிமையாக முறையில் செய்து விடலாம். ஆம் இன்று மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம். ஜிகர்தண்டா வெயில் காலங்களில் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை ஆகையால் இந்த முறையில் நீங்கள் ஜிகர்தண்டாவே வீட்டிலேயே செய்து குடுபத்துடன் சந்தோஷமாக குடியுங்கள்.