Recipes

Recipe Image
முருங்கைக்காய் மசாலா | Murungakkaai Masala Recipe In Tamil

முருங்கைக்காய் மசாலா, மணமணக்க முருங்கைக்காய் மசாலா இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்!!!!!முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைக்கலாம். குழம்பு வைக்கலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை வைத்து முருங்கைக்காய் மசாலா எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி முருங்கைக்காய் மசாலா செய்தால் இதை சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, வெரைட்டி ரைஸ்க்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Recipe Image
சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி | Chicken Pulao – Ramzan Recipe in Tamil

ஆஃப்கானி சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி. எளிமையான சுவையான முறையில் செய்யப்படும் ஆஃப்கானி சிக்கன் புலாவ்!!! பொதுவாக பலருக்கு எளிமையான முறையில் சரியான பக்குவத்தில் செய்யப்படும் சிக்கன் புலாவ் மிகவும் பிடிக்கும்.. இது அதிகம் திகட்டாது ரம்ஜான் சமயத்தில் அதிகம் திகட்டாத இந்த புலாவ், எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Recipe Image
கடாய் பன்னீர் | Kadai Paneer Recipe in Tamil

கடாய் பன்னீர். சவையான கடாய் பன்னீர் வீட்டிலேயே செய்து கொடுங்கள். புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஏனென்றால் அங்கு செய்யப்படும் பன்னீர் கிரேவியின் சுவை நாம் வீட்டில் செய்யும் கிரேவியின் சுவை போன்று இல்லாமல் மிகவும் சூப்பராக இருக்கும். எனவே குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் இந்த கடாய் பன்னீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து போகின்றோம்.

Recipe Image
மட்டன் வடை | Mutton Vadai Recipe In Tamil

மட்டன் வடை – ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை. வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க. வெளிப்புறத்தில் கிரிஸ்பியாக உட்புறத்தில் மிருதுவாக சூப்பரான சுவையில் இருக்கும் இந்த மட்டன் வடை நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக செய்து அசத்தலாமே! செய்வது எப்படி? மட்டன் வடை எப்படி செய்வதுஎன்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

Recipe Image
கறிபே்பிலை குழம்பு | Karivepillai Kulambu Recie in Tamil

விதவிதமான குழம்புகளில் கறிவேப்பிலை குழம்பு ரொம்பவே சுவையான ஒரு குழம்பாக இருக்கிறது.ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள்.

Recipe Image
ஆட்டுக்கறி சாப்ஸ் | Mutton Chops Recipe in Tamil

ஆட்டுக்கறி பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக உள்ளது. வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க ஆட்டுக்கறி சாப்ஸ் செய்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம் ஆட்டுக்கறி சாப்ஸ் செய்வது மிகவும் எளிது. சுவையானதும் கூட. அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அன்று முதல் இன்றைய கால கட்டம் வரை ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.