Recipes

Recipe Image
தேங்காய் பால் கோதுமை ஹல்வா | Coconut Milk Weat Halwa

ஹல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நெய், எண்ணெய், வெள்ளை சக்கரை இவை எதுவுமே இல்லாமல் வாயில் போட்டதும் நழுவிக் கொண்டு ஓடும் இந்த தேங்காய் பால் கோதுமை அல்வா சுவையில் சிறந்தது. ஒரே ஒரு முறை மட்டும் நீங்கள் செய்து பார்த்தால் போதும். அவ்வளவுதான் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி கேட்பார்கள். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு இந்த அல்வா பிடித்த இனிப்பு பொருளாக மாறிவிடும். இந்தப் பதிவில் தேங்காய் பால் கோதுமை ஹல்வா எப்படி செய்வது, என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதை பார்ப்போம்

Recipe Image
பீட்ரூட் புலாவ் | Beetroot Puloa Recipe in Tamil

பீட்ரூட் புலாவ்,உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘பீட்ரூட் புலாவ்’ வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த பீட்ரூட் புலாவ் ரொம்பவே வித்தியாசமான சுவையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கிறது. வெறும் பத்து நிமிடத்தில் சுவையான பீட்ரூட் புலாவ் எளிதாக வீட்டிலேயே செய்து பாருங்கள. வித்தியாசமான சுவையுடைய ‘பீட்ரூட் புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்

Recipe Image
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | Schezwan Potato Manchruian Recipe in Tamil

அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு தான். காய்கறிகளில் எதை சாப்பிடவில்லை என்றாலும் இந்த உருளைக்கிழங்கை எல்லா குழந்தைகளுமே விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.

Recipe Image
பச்சை பயறு தோசை | Pachai Payaru Dosai Recipe In Tamil

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பச்சை பயறு தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பச்சை பயறு தோசைக்காக மாவு தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். இந்த தோசை உடலுக்கு மிக ஆரோக்கியமானது. தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் வெங்காயம், மல்லி இலையை தோசை மாவில் சாரல் போல தூவி சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

Recipe Image
மரவள்ளிக் கிழங்கு புட்டு | Maravalli Kizhangu Puttu Recipes in Tamil

மரவள்ளிக் கிழங்கு புட்டு ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து பாருங்க ! புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும்.இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Recipe Image
கடலைப்பருப்பு சட்னி | Kadalai Paruppu Chutney Recipe in Tamil

கடலைப்பருப்பு சட்னி அரைச்சு பாருங்க டேஸ்ட் மனசுல நிக்கும்!!!!! இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கடலைப்பருப்பு சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் கடலைப்பருப்பு சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கடலைப்பருப்பு சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க