Recipes

Recipe Image
தயிர் சேமியா | Curd Semiya Recipe in Tamil

இன்று நாம் பார்க்க இருக்கும் உணவை நீங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சலிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆம், இன்று நாம் தயிர் சேமியா பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதனுடன் சிறு தாளிப்பு சேர்த்து மேல் மாதுளை பழங்கள் தூவி விட்டு சாப்பிட கொடுக்கும் பொழுது குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் கூட இது ஒரு பிடித்தமான ரெசிப்பியாக இருக்கும். அவர்களும் கூட உங்களை இது போல் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Recipe Image
தேங்காய் தோசை | Coconut Dosai Recipe in Tamil

பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் சலித்து போகும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போகும். இதனால் பெரும்பாலோனர் இரவு உணவுவை ஹோட்டல்களுக்கு சென்று விதவிதமான தோசைகளை சாப்பிடுகின்றனர். நம் வீட்டிலேயே இன்று ஒரு விதமான தோசையை செய்து பார்க்க போகிறோம் ஆம், இன்று தேங்காய் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதற்கு வெள்ளை ஆப்பம் என்று வேறொரு பெயரும் இருக்கின்றது. இருந்தாலும் நாம் தேங்காய் பயன்படுத்தி இதை செய்வதால் தேங்காய் தோசை என்று சொல்லலாம். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Image
உளுத்தம் பால் | Ulutham paal Recipe In Tamil

ரோட்டு கடைகளில் உளுத்தம் பால் வாங்கி சாப்பிட்ருப்போம் அந்த சுவையே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட, இந்த உளுத்தம் பாலை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். பெண்கள் இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது.இந்த உளுத்தம் பாலை செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்திலே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த உளுத்தம் பாலை ரோட்டு கடை சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.