Recipes

Recipe Image
புரோட்டின் லட்டு | Protein Laddu Recipe in Tamil

நாம் குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை அவர்களுக்கு உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் அந்த உணவுகளை தவிர்க்க தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம். ஆம் இன்று புரோட்டின் லட்டு செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். சில பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும் அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதிலிருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் அந்த இனிப்பு லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று புரோட்டின் லட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி | Chettinad Mealmaker Gravy Recipe in Tamil

இந்த கிரேவியை அனைத்து விதமான உணவு பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் உதரணமாக சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதம் என அனைத்து உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிட ஒரு தரமான கிரேவியாக இருக்கும். இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிட கொடுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்கள் செட்டிநாடு மீன் மேக்கர் கிரேவிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக ஆகிவிடுவார்கள். ஆம், அந்த அளவிற்கு சுவையும், மணமும் நன்றாக இருக்கும். இன்று இந்த செட்டிநாடு மீன் மேக்கர் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
கொத்து சப்பாத்தி | Kothu Chapathi Recipe in Tamil

நாம் பரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் புரோட்டா என்பது முழுக்க முழுக்க மைதாவினால் தயார் செய்யப்படுவது நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் மைதாவும் ஒன்று தான். ஆகையால் இனி கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கொத்து சப்பாத்தி ஒரு முறை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதும் என்று சொல்ல மாட்டார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு தரமான உணவு. இன்று இந்த கொத்து சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
பெப்பர் சிக்கன் | Pepper Chicken Recipe in Tamil

சிக்கன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த உணவு என்றால் அதில் இந்த பெப்பர் சிக்கன் இருக்கும். அவர்களுக்கு அதில் இருக்கும் காரசாரமான சுவையும், அதிலிருந்து வரும் நல்ல மணமும் மிகவும் பிடித்தபோய் இருக்கும். நீங்கள் இந்த பெப்பர் சிக்கன் ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிக்கன் ரெசிபி ஆக இந்த பெப்பர் சிக்கன் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த சிக்கன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். அதனால் இன்று பெப்பர் சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
எலுமிச்சை ரசம் | Lemon Rasam Recipe in Tamil

சிக்கன் மற்றும் மட்டன் போன்ற செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதற்காக தான் இது போன்ற உணவை உட்கொள்ளும் போதும் நாம் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். எலுமிச்சை ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான எலுமிச்சை ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

Recipe Image
இனிப்பு பனியாரம் | Sweet Paniyaram Recipe in Tamil

இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள்.இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு வெல்லம் கொண்டு செய்த பனியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று இனிப்பு பனியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Recipe Image
சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop Recipe in Tamil

பிரியாணி, கிரேவி மற்றும் குழம்பு என சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகளுடன் பொரித்த சிக்கனை நாம் தயார் செய்து சாப்பிடுவது பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் 65, போன்லெஸ் தயார் செய்து சாப்பிடாமல். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் சிக்கன் லாலிபாப் உங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். இப்படி நீங்கள் சிக்கன் லாலிபாப் செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று மொறு மொறுப்பான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
மையோனைஸ் | Mayonnaise Recipe in Tamil

கீரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன் மற்றும் பொறித்த கோழி இது போன்ற சிக்கன் வகைகள் மக்களிடையே பிரபலமாக உள்ளது. இந்த உணவுகள் சாப்பிடும் பொழுது இதனுடன் சிக்கனை தொட்டு சாப்பிடுவதற்காக மையோனைஸ் கொடுப்பார்கள் நாம் அதை தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் ஹோட்டலில் இருந்து சிக்கன் பார்சல் வாங்கும் பொழுது அவர்கள் கொடுக்கும் மையோனைசின் அளவு கம்மியாக இருக்கும் ஆனால் அதே மையோனைஸ் எளிதான முறையில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம். ஆம் இன்று மையோனைஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
பால் கொழுக்கட்டை | Paal Kolukattai Recipe in Tamil

நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பால் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பால் கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.