பட்டர் நாண் | Butter Naan Recipe in Tamil
ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய…! ஹோட்டலில் சாப்பிடும் ‘பட்டர் நாண்’!, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா?நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் பட்டர் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த பட்டர் நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த பட்டர் நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும். நம்முடைய வீட்டிலேயே பட்டர் நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த பட்டர் நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே!