Recipes

கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் | Kerala Style Chicken Fry Recipe in Tamil

இந்த கேரளா சிக்கன் வறுவல் சிறியவர்கள் இந்த பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு செய்து பார்க்க இருக்கிறோம். நம்ம ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் மற்றும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசியில் இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்து பாருங்கள்.

கர்நாடகா துப்ப தோசை| Karnataka Thuppa Dosai Receipe in Tamil

கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிரு க்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கர்நாடகா துப்ப தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடலாம்.

உருளை கோல்டன் ஃப்ரை | Potato Golden Fry In Tamil

உருளை கோல்டன்ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இதுகுழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும். வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல்டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக்கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயேஎப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

பூண்டு பொடி | Garlic Podi Recipe In Tamil

தினமும் வீட்டில் காலை உணவாக இட்லி தோசை என்பது தான் அதிகமாக இருக்கும். அவ்வாறு இவற்றிற்கு ஏற்றார் போல் சைடிஸ் செய்வது என்பது தினமும் ஒரு டாஸ்க் போன்று தான் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று யோசிப்பதிலையே பாதி நேரம் கழிந்து விடும். தினமும் ஏதேனும் ஒரு சட்னியை செய்து வைத்தாலும் அது அலுப்பாக தான் இருக்கும். இதற்காக சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பூண்டு பொடியை ஒரு முறை அரைத்து வைத்துக் கொண்டால் போதும் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதிலிருந்து கொஞ்சம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது இட்லி, தோசை, உத்தப்பம் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.இந்த சுவையான பூண்டு பொடியை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இறால் தந்தூரி | Prawn Tandoori Recipe In Tamil

ஹோட்டலில் சாப்பிட வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே ஸ்பெஷல் உணவுகளையும் செய்யலாம்.அப்படிப்பட்ட ஒரு சுவையான உணவின் செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்,அசைவம் சாப்பிடுபவர்களின் மிகவும் பிடித்த உணவு என்றால் இறால் தான். இறாலில் செய்யப்படும் ஒவ்வொரு உணவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் இறால் தந்தூரி . அதை உருவாக்க நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் சுவைத்தால், அனைத்து கடினமும் பறந்து போய்விடும்.. ஞாயிறு அன்று சௌகரியமாக செய்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முட்டை கிரேவி | Egg Gravy Recipe In Tamil

முட்டை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் முட்டையில் கிரேவி செய்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடே கிடையாது. இந்த முட்டை கிரேவியானது அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சாப்பாடு அதிகம் சாப்பிடாதவர்கள் கூட மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.அதுமட்டும் அல்லாமல் வேக வைத்து முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் தரும் அந்தவகையில் வேக வாய்த்த முட்டையை வைத்து இந்த மாரி கிரேவி செய்து சாப்பிடுங்க. சப்பாத்தி, சாப்பாடு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

மட்டன் குழம்பு | Mutton Kulambu Recipe In Tamil

அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி விரும்பி சாப்பிடக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் இந்த ரெசிபி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.இந்த மட்டன் குழம்பு கடைகளில் வைக்கப்படும் அதே சுவையில் இருக்கும். நாம் வீட்டிலேயே அதே சுவையில் சுலபமாக செய்து விடலாம்.இந்த மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த மட்டன் குழம்புடன் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.