கிராமத்து பச்சை பயறு சட்னி | Pachai Payaru Chutney Recipe in Tamil
வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும்.