Recipes

Recipe Image
கருவாட்டு குழம்பு | Karuvattu Kulambu Recipe in Tamil

இன்று நெத்திலி கருவாடு பயன்படுத்தி செய்த கருவாட்டு குழம்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக நம் மீன் குழம்பு செய்யும்போது அதனுடன் எந்தவித காய்கறியும் சேர்க்காமல் செய்வோம் ஆனால் கருவாட்டு குழம்பு நாம் செய்யும் போது அதனுடன் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து செய்தால் தான் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி காய்கறிகளை பயன்படுத்தி தான் இன்று சுவையான கருவாட்டு குழம்பு செய்யப் போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த கருவாட்டு குழம்பு செய்து கொடுங்கள் பின் அனைவரும் உங்களை அடிக்கடி இதே போல் கருவாட்டு குழம்பு செய்ய சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

Recipe Image
வஞ்சரம் மீன் சுக்கா | Vanjaram Meen Sukka Recipe in Tamil

இன்று கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்றவாறு மீன் சுக்கா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் சுக்கா செய்யப் போகிறோம். நீங்கள் இந்த வஞ்சரம் மீனில் சுக்கா செய்வதால் முள் இருக்குமோ என்ற பயம் வேண்டாம் வஞ்சரம் மீனில் முள் இருக்காது. ஆகையால் முள் இருக்குமோ என்ற பயம் இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி உங்களை இதே போல் செய்ய சொல்லும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த வஞ்சரம் மீன் சுக்கா இருக்கும்.

Recipe Image
கடலை பருப்பு சண்டல் | Kadalai Parupu Sundal Recipe in Tamil

இன்று கடலைப்பருப்பு சுண்டல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டலை பயன்படுத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவிலேயே சுண்டலை ஊற வைக்க வேண்டும் பின் அதை அவிக்க வேண்டும். எப்படி பல வேலை பாடுகள் இருக்கிறது. ஆனால் இந்த கடலை பருப்பு சுண்டலை உடனடியாக வைத்துவிடலாம் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Image
முட்டை மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

நீங்கள் எளிமையாக மற்றும் வேகமாகவும் உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம் இந்த இந்த முட்டை மஞ்சூரியன் நீங்கள் கிரேவியாகவும் செய்து கொள்ளலாம் அல்லது டிரையாக வேண்டுமென்றால் அப்படியும் செய்து கொள்ளலாம். இதன் சுவை அற்புதமாக இருக்கும் ஒரு தடவை நீங்கள் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டீர்கள் என்றால் அடிக்கடி நீங்களே செய்யும் அளவிற்கு இந்த முட்டை மஞ்சூரியன் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த முட்டை மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அந்த சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்.

Recipe Image
நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி | Nerupil Sutta Mangai Recipe in Tamil

நான் சிறுவயதில் இருக்கும் பொழுதெல்லாம் எங்களது கிராமத்தில் என் பாட்டி இது போன்று சட்னி செய்து கொடுப்பார்கள். இன்று நாமும் அதே முறையில் நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி செய்து பார்க்க போகிறோம். ஆம் இந்த நெருப்பில் சுட்ட மாங்காய் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நீங்கள் இட்லி தோசை உடன் மட்டுமில்லாமல் சோறுடன் மதிய உணவுக்கு துவையலாக எடுத்தும் சாப்பிடலாம் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும்.

Recipe Image
வாழைப்பழ புட்டு | Banana Puttu Recipe in Tamil

நாம் இன்றைக்கு புட்டுகளில் மிகவும் சுவையான வாழைப்பழம் புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக புட்டு தயார் செய்து அதனுடன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆனால் இன்று வாழைப்பழத்தை புட்டு சமைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை எப்படி இருக்கும். இது போன்று இந்த வாழைப்பழ புட்டை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் கொடுத்ததை விட இன்னும் வேண்டும் என மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipe Image
சிக்கன் தம் பிரியாணி | Chicken Thum Biriyani Recipe in Tamil

இன்று பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் பிரியாணி பல வகைகளில் செய்வோம் அதிலும் மிகவும் அதீத சுவையை தரும் பிரியாணி என்றால் தம் பிரியாணி தான். ஆகையால் இன்று நாம் சுவையான சிக்கன் தம் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். இப்படி நீங்கள் இந்த முறையில் சிக்கன் தம் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போக எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள்.