Recipes

வல்லாரை சட்னி | Vallarai keerai chutney Recipe in Tamil

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வல்லாரை கீரை சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். வல்லாரை சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும், ருசியாகவும் சமைக்கலாம். இந்த சட்னி தோசை, இட்லிக்கு மட்டும் இல்லாமல் உப்புமா, வடை, போன்றவற்றிற்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . இங்கு வல்லாரை சட்னியை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் சமைத்து பாருங்கள்.

செட்டிநாடு வாழைக்காய் மசாலா | Chettinadu Raw Banana Masala Recipe In Tamil

செட்டிநாடு வாழைக்காய் மசாலா. இது கறி மசாலாவா , இல்லை வாழைக்காய்மசாலாவா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலாசெய்து பாருங்க.சில நேரம் அசைவ சாப்பாடு சாப்பிட முடியாது.ஆனால் மசாலா வாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நன்றாகஇருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில் ஒரே ஒரு வாழைக்காய் இருந்தால் போதும்.அசத்தலான செட்டிநாடு வாழைக்காய் மசாலா  மிகமிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்குகூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்முறையைஎப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

குடை மிளகாய் சாதம் | Capsicum Rice Recipe In Tamil

இன்றுநாம் லஞ்ச் பாக்சிற்கு கொடுத்து அனுப்பும் வகையில் வெரைட்டி ரைஸ் செய்ய உள்ளோம்.பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றால் தயிர் சாதம் ,தக்காளி சாதம், சாம்பார் சாதம்,காய்கறி சாதம் என்று தான் அதிகமாக செய்து கொடுத்து அனுப்புவோம். ஆனால் இன்று நாம் சூப்பரான சுவையில் கேப்ஸிகம் ரைஸ் செய்ய உள்ளோம். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்திடலாம். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள்,பச்சை சிவப்பு நிற கேப்ஸிகம்களை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும்.

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா | Cauliflower Paneer Pattani Masala Recipe in Tamil

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். காலிஃப்ளவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எப்படி செய்தாலும் அசைவ சமையலை மிஞ்சும் அளவிற்கு ருசியாக இருக்கும். சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம்.