Recipes

சோயா சங்ஸ் வெஜ் பிரியாணி | Soya Chunks Veg Biryani Recipe In Tamil

பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது சோயா சங்க் பிரியாணி. இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாக செய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த சோயா சங்க் பிரியாணியை பரிமாறி அசத்தலாம்.

துவரம் பருப்பு அடை | Toor Dal Adai Recipe In Tamil

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியானஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒருஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு துவரம் வைத்து சமைக்கும் எந்தஉணவும் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. துவரம் பருப்புஉடம்பினை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாகும். அவ்வாறு துவரம்பருப்பில் செய்யக்கூடிய இந்த அடை ரெசிப்பியும் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.ஆகவே இதனை எளிமையாக செய்து விட முடியும். எப்பொழுதும் துவையல், பருப்பு பொடி போன்றவற்றைசெய்யும்பொழுது இந்த துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். வாருங்கள் இப்போது துவரம்பருப்பு அடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஆப்பிள் கீர் | Apple Kheer Recipe In Tamil

பொதுவாக குழந்தைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு பால் சாப்பிட பிடிக்காது. ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் பாலையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் கீர். இதனை எப்படி செய்வது என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கத்தரி உருளை மண்டி | Brinjal Potato Mandi Recipe In Tamil

இன்று சுலபமான முறையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி களைந்த நீர்  சேர்த்து கத்தரி உருளை மண்டி செய்வது எப்படி என்பதைபற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபிக்கு மசாலாபொடி தேவை இல்லை. அப்படி இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்.இந்த கத்தரி உருளை மண்டி நீங்களும் செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும்ஒரு பிடி சாதத்தை சேர்த்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில்மணமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.