Recipes

Recipe Image
காய்கறி தோசை | Vegtable Dosai Recipe in Tamil

உங்களிடம் தோசை மாவு இல்லாத பட்சத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாள் உடனடியாக இதுபோன்ற சமயங்களில் நீங்கள் இந்த தோசை மாவை தயார் செய்து மொறு மொறுப்பான காய்கறி தோசையை சுட்டு சாப்பிடலாம். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாகவே இது மாறி போகும் அந்த அளவிற்கு மிகவும் பிரமாதமான மற்றும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இரவு உணவு. இந்த மொறுமொறுப்பான காய்கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
பீட்ரூட் மில்க் ஷேக் | Beetroot Milkshake Recipe In Tamil

பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சுவையான மில்க் ஷேக் இதை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிடிக்கும் ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு நல்லதல்ல. எனவே ரோஸ் மில்க் ஷேக் சுவையுடன் கூடிய இந்த பீட்ரூட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. இந்த மில்க் ஷேக்கை வீட்டிலே குறைந்த நேரத்தில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை சரியாக படித்து பார்த்து நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.

Recipe Image
சுவையான இட்லி பொடி | idli podi Recipe in Tamil

இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலருக்கும் இட்லி தோசைக்கு இட்லி பொடி வைத்து தான் சாப்பிடுவார்கள். அப்படி சுவையான இட்லி பொடியை பெரும்பாலும் கடைகளில் விற்பனையாகும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இட்லி பொடியை வாங்கி பயன்படுத்துவது நல்லதாக இருக்காது. ஏனென்றால் அவர்கள் பதப்படுத்துவதற்காக சில ரசாயன பொருட்களை சேர்த்து செய்வார்கள். ஆனால் நீங்கள் எளிமையான முறையில் வீட்டில் எப்படி இட்லி பொடி செய்வது என்று கவலைப்படாதீர்கள் இன்று நாம் அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

Recipe Image
மாங்காய் பச்சடி | Mango Pachadi Recipe in Tamil

பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு காலை இரவு உணவாக அதிகபட்சம் கொடுக்கும் உணவே பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான். இது போன்ற உணவுகளை கொடுக்கும்போது பெரும்பாலும் ஊறுகாய் தான் பலர் இன்றும் பரிமாறுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பொதுவாக ஊறுகாய் சாப்பிடுவதில் பெரிதும் விருப்பம் இருக்காது நீங்கள் அதற்கு பதிலாக இனிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய இந்த மாங்காய் பச்சடியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் இந்த பச்சடியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் பின் குழந்தைகள் இதை அடிக்கடி செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு இந்த மாங்காய் பச்சடி அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipe Image
திருக்கை மீன் குழம்பு | Thirukkai Meen Kulambu Recipe in Tamil

இன்று நாம் பார்க்க இருக்கிறது திருக்கை மீன் பற்றி தான். இந்த மீனை அதிகமாக யாரும் சமைக்க மாட்டார்கள் காரணம் இந்த மீனை பக்குவமான முறையில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரியாது. ஆகையால் இன்று திருக்கை மீனை வைத்து கிராமத்து ஸ்டைலில் எப்படி திருக்கை மீன் குழம்பு வைப்பது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் இதுபோல் ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த திருக்கை மீன் குழம்பு செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் மேலும் ஒரு தட்டு சோறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான ருசியில் இந்த திருக்கை மீன் குழம்பு இருக்கும்.

Recipe Image
டயட் சிக்கன் | Diet Chicken Recipe in Tamil

இப்பொழுது பலர் யோகா, உடற்பயிற்சி, உடற்பயிற்சி நிலையம் செல்வது, ஓடுவது மற்றும் நடப்பது என உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் சிலர் உணவு பழக்க வழக்கங்களிலும் ஆரோக்கியமாக இருக்க சில மாற்றங்களை கடைபிடித்து வருகின்றனர். இதில் உடல் எடையை குறைப்பதற்கு தான் பலரும் போராடி வருகின்றனர். அவர்களுக்காக நான் இன்று எண்ணெய் இல்லாமல் ஒரு சிக்கன் ரெசிபி பார்க்க போகிறோம். ஆம் இதை உடல் எடையை குறைக்கும் நினைக்கும் நபர்கள் என் இந்த சிக்கன் ரெசிபி செய்து சாப்பிட்டு இருந்தால் உடல் எடை சட்டு என்று குறையும் இதன் சுவையும் அட்டகாசமாகவே இருக்கும். இன்று இந்த எண்ணெய் இல்லாத சிக்கனை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை | Potato Pepper Fry Recipe in Tamil

உருளைக்கிழங்குககை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி செய்யும் ஒரு பொரியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பெரும்பாலும் உருளைக்கிழங்கை காரசாரமான சுவையில் சாப்பிட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும் ஆகையால் இன்று உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இதே போல் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு பரிமாறினால் அவர்கள் அடிக்கடி செய்ய சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Recipe Image
வேர்கடலை சிக்கன் ரோஸ்ட் | Groundnut Chicken Roast Recipe in Tamil

இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். எப்பொழுதும் ஓரே மாதிரியாக சேர்க்கும் மசாலா பொடிகள் சேர்த்து நீங்கள் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதில் என்ன புது சுவை இருக்கிறது. அதற்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்து பொடி செய்து அதில் நீங்கள் சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்ந சிக்கன் ரோஸ்டை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதன் பின் இந்த சிக்கன் ரோஸ்டை நீங்களே அடிக்கடி சமைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.