இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான கொல்லம் சட்னி இப்படி செய்து பாருங்க! அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Summary: எப்பொழுதும் பீர்க்கங்காய் பொரியல் அல்லது குழம்பு, கூட்டு செய்தால் அதன் தோலை நீக்கித்தான் செய்வோம்.அந்த தோலை வீணாக தான் குப்பையில் போடுவோம். உங்களுக்கு தெரியுமா அந்த தோலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம் என்று. ஆமாங்க இனி அந்த தோலை வீணாக்காதீங்க அந்த தோலில் சுவையாக சட்னி செய்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

Ingredients:

  • ே பீர்க்கங்காய்
  • நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 வர மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • புளி
  • தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் 2 பீர்க்கங்காயை தோல் மட்டும் சீவி தனியாக தோலை எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து அத்துடன் பூண்டு, வர மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கியதும் அடுப்பை நிறுத்தி தேங்காய் துருவலை சேர்த்து கலந்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.