மதிய உணவுக்கு ஏற்ற பஞ்சாபி வெண்டைக்காய் தாபா கிரேவி இப்படி செய்து பாருங்க!

Summary: பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் வெண்டைக்காய் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் கிரேவியும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இந்த பஞ்சாபி தாபா கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 15 வெண்டைக்காய்
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • ½ டீஸ்பூன் சீரக பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • 3 டீஸ்பூன் தயிர்
  • 1 தக்காளி
  • 7 முந்திரி பருப்பு
  • கஸ்தூரி மேதி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, சீரக பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து கலந்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
  5. கொதித்ததும் கடைசியாக கஸ்தூரி மேதி தூவி இறக்கவும்.