பெங்காலி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும்!

Summary: உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இது எப்பொழுதும் ஒரே மாரி மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை பெங்காலி ஸ்டைலில் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பெங்காலி மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க

Ingredients:

  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தலை
  • ½ கிலோ மீன்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • ½ டீஸ்பூன் மிளகாய் பொடி
  • ½ டீஸ்பூன் மல்லி தூள்
  • ½ டீஸ்பூன் பெப்பர்
  • ½ டீஸ்பூன் சீரக பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் கஸ்தூரி மேதி
  • உப்பு
  • ½ எலுமிச்சை பழம்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. மீன்களை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அதனை ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரக பொடி, கரம் மசாலா, கஸ்தூரி மேதி, தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து சுத்தம் செய்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  4. அடுத்து ஒரு தவாவில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
  5. இப்பொழுது சுவையான பெங்காலி மீன் வறுவல் தயார்.