டீ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பட்டர் பிஸ்கட் இப்படி செய்து பாருங்க! கடையில் வாங்குவது போலவே இருக்கும்!

Summary: சுவையான மற்றும் மிருதுவான பட்டர் பிஸ்கட் டீக்கு ஒரு சிறந்த துணையாகும், மேலும் 4 பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த பிஸ்கட்டுக்கு பெரும் ரசிகையாக இருப்பார்கள். இது வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படும். பேக்கரி ஸ்டைல் சுவையில் பட்டர் பிஸ்கட் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ kg மைதா
  • 100 gram பட்டர்
  • 150 gram சீனி
  • 200 gram நெய்
  • 2 tbsp சோள மாவு
  • 2 tbsp பால் மாவு
  • ¼ tsp பேக்கிங் பவுடர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

Steps:

  1. முதலில் பட்டர் பிஸ்கட் செய்ய பட்டரை நன்கு கையால் மசித்து கொள்ளவும். பின் திரித்த சீனிைய கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
  2. மற்றொரு சட்டியில் மாவு பொருள்கள் அனைத்தையும் சலித்து வைத்து கொள்ளவும்.பின் நெய்யை லேசாக சூடாக்கி வைத்து கொள்ளவும்.
  3. பிறகு பிசைந்து வைத்த பட்டர் கலவையில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நெய் விட்டு பிசையவும். மாவின் பதம் ஒரு பிடி பிடித்தால் மாவு உடையாமல் இருக்க வேண்டும்.
  4. பின் மாவை தட்டி விரும்பிய வடிவில் ஓவனில் வைத்து சுட்டு எடுக்கவும். சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி.