மொறு மொறுனு பாகா இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இறால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் தரப்படும் இறால் வறுவல் மொறு மொறுனு அவ்வளவு சுவையாக இருக்கும், அதுக்குன்னு ஆசை படும் பொழுதெல்லாம் ஹோட்டலில் போய் சாப்பிடவா முடியும். அந்தவகையில் இனி நம் வீட்டிலேயே எப்படி மொறு மொறுனு இறால் வறுவல் எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 5 பல் பூண்டு
  • 3 பீஸ் இஞ்சி
  • கொத்தமல்லி
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1/2 KG இ
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் தனியா பொடி
  • உப்பு

Equipemnts:

  • தவா

Steps:

  1. இறால்களை நன்கு சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.
  2. முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்
  3. பிறகு சுத்தம் செய்த இறாலில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. அடுத்து ஒரு தட்டில் அரிசி மாவு, ரவை, மிளகாய் பொடி, தனியா பொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த இறால்களை ஒவொன்றாக எடுத்து கலந்து வைத்துள்ள ரவையில் டிப் பண்ணி தவாவில் போட்டு சிவக்க பொரிந்ததும் பரிமாறவும்.