கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குல்பி ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில் குல்பி சாப்பிடுவதை பலர் விரும்புவார்கள்.  கோடை நாட்களில் கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை சாப்பிடுவது மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. மார்க்கெட்டில் வாங்கும் இந்த கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளிலும் செய்யலாம்.

Ingredients:

  • 600 மி.லி பால்
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 2 டேபிள்ஸ்பூன் பிஸ்தா பருப்பு
  • 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 3 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குல்பி மோல்டில்

Steps:

  1. முதலில் அடிகனமான பாத்திரத்தில் பால் சேர்த்து 10 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்துக் காய்ச்சவும். ஒரு டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவை சேர்க்கவும்.
  2. தனியாக வைக்கவும். சோள மாவை 4 மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும். அடுப்பில் காயும் பாலில் சோள மாவு கரைசலை சேர்க்கவும்.
  3. அடுப்பை சிறிய தீயில் வைத்துக் கிளறவும். சோள மாவு சேர்ப்பதால் விடாது கிளறவும். பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும்.பால் கெட்டியாகும் போது குங்குமப்பூ கலந்த பால் சேர்க்கவும்.
  4. அடுப்பை அணைத்து விட்டு பிஸ்தா, சர்க்கரை பொடி சேர்க்கவும். நன்கு கலக்கவும். நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்பி தயார்.