அசத்தலான ருசியுடன் இருக்கும் மட்டன் சௌ சௌ தொக்கு, இப்படி செஞ்சுதான் பாருங்களேன்! இதன் சுவையே தனி தான்!

Summary: மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி மட்டன் சௌ சௌ தொக்கு செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.அசைவ விருந்திற்க்கு இந்த சுவையான மட்டன் சௌ சௌ தொக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி குருமா, குழம்பு செய்து சாப்பிடுவீர்கள்.

Ingredients:

  • அரை கிலோ ஆட்டுக்கறி
  • 100 கிராம் ஆட்டுக் கொழுப்பு
  • 1/4 கிலோ சௌ சௌ
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒருகுக்கரில் மட்டன், பச்சை மிளகாய், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – இந்துப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் (கொழுப்பு சேர்க்க வேண்டாம்.
  2. ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
  3. பின்மட்டன் கொழுப்பு, நறுக்கிய சௌ சௌ சேர்ந்துவதக்கி, அத்துடன் வேக வைத்த மட்டனை (அதோடு உள்ள தண்ணீருடன்) சேர்க்கவும்.
  4. பின்மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – தேவைக்கு உப்பு சேர்த்து மேலும் வேக வைக்கவும். தொக்கு பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் சென சௌ தொக்கு தயார்