ருசியான தெலுங்கானா தவா முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்க! அடுத்த முறை மீண்டும் நீங்களே செய்வீங்க!

Summary: எலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தவா முட்டை வறுவல். உங்களுக்கு முட்டை மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுவுக்கு தெலுங்கானா ஸ்டைலில் செய்து பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. தவா முட்டை வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1½ டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 5 வர மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 ஸ்பூன் பட்டர்
  • 10 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • கொத்தமல்லி தலை
  • 4 முட்டை
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மிக்சி ஜாரில் தனியா, மிளகு, வர மிளகாய், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பானில் பட்டர் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதங்கியதும் அரைத்துவைத்துல மசாலா மற்றும், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வேக வைத்த முட்டைகளை இரண்டாக அறுத்து மசாலாவில் வைத்து மூடி போட்டு கொஞ்சம் நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.