கேரளத்து இறால் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கேரளத்து இறால் ூட்டு.

Ingredients:

  • 250 கிராம் இறால்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 2 எலுமிச்சை
  • 5 பச்சைமிளகாய்
  • 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 வாணலி

Steps:

  1. நன்குகழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும். தக்காளியைகொதிக்கும் நீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  3. பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. அத்துடன்தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை வைக்கவும்.
  5. பின்பு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும், சுவையான கேரளத்து இறால் கூட்டு தயார்.