ஆப்கானி பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Summary: எப்பொழுதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரியான குருமா, போன்றே வைக்காமல் இது போன்று பன்னீர் கிரேவி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. எத்தனை சப்பாத்தி சாப்பிட்டோம் என்றே கணக்கில்லாமல் சாப்பிடுவீங்க. ஹோட்டல்களில் தரப்படும் பன்னீர் கிரேவி அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் ஒருபோதும் நம் வீட்டில் அதே சுவையில் செஞ்சி சாப்பிட்ருக்க மாட்டோம். இனி அந்த கவலை வேண்டாம். இனி வீட்டிலேயே சுவையாக எப்படி பன்னீர் கிரேவி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • பன்னீர்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் பெப்பர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • இஞ்சி
  • 10 முந்திரி பருப்பு
  • கொத்தமல்லி தலை
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் பட்டர்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் பச்சை பட்டாணி
  • கஸ்தூரி மேதி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  2. பிறகு அதே பானில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்திரி பருப்பு, சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதங்கியதும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  4. ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் தயிர், மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகாய் தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து ஒரு வாணலில் பட்டர் சேர்த்து சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்டை இதில் சேர்த்து அத்துடன் பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  6. கிரேவி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து அதன் மேல் கஸ்தூரி மேதி சேர்த்து இறக்கவும்.