வெயிலுக்கு இதமா குளு குளுனு தேங்காய் பால் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Summary: அடிக்குற வெயிலுக்கு கடைகளில் ஜுஸ் போன்று வாங்கி குடிச்சி குடிச்சி போர் அடித்து விட்டதா அப்போ தேங்காய் பால் மில்க் ஷேக் செய்து குடுச்சி பாருங்க. எனர்ஜியாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் வீட்டிலேயே குறைந்த செலவில் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ மூடி தேங்காய்
  • சர்க்கரை
  • 10 முந்திரி பருப்பு
  • 10 பாதம் பருப்பு
  • ஐஸ் கடிகள்

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் தேங்காவை கீந்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து அதன் முதல் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதே தேங்காயில் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு இரண்டாம் பாலையும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து மிக்சி ஜாரில் முந்திரி பருப்பு, மற்றும் பாதம் பருப்பு இரண்டையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  4. இப்பொழுது வடிகட்டிய தேங்காய்ப்பால், மற்றும் அரைத்த பாதம், முந்திரி பருப்பு இரண்டையும் மிக்சியில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து ஒரு டம்பளரில் ஊற்றி அதில் ஐஸ் கட்டிகள் போட்டு அருந்தவும்.