இரவு உணவுக்கு ஏற்ற ருசியான மக்ரோனி பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

Summary: குழந்தைகளுக்கு மதியம், என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ சட்டுனு இந்த மக்ரோனி பாஸ்தா செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அதுமட்டும் அல்லாமல் மக்ரோனி என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் இந்த மாறி செஞ்சி கொடுத்திக்கான மீண்டும் எப்பொழுது செய்விங்க அம்மா என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • எண்ணெய்
  • உப்பு
  • 50 கிராம் பாஸ்தா
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • கோடை மிளகாய்
  • 1 கேரட்
  • 2 தக்காளி
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். வெந்ததும் அதனை பச்ச தண்ணீரில் நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அலசிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கேரட், கொடை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  4. கொஞ்சம் வதங்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றவும். நன்கு கலந்து அத்துடன் தேவையான அளவு உப்பு, தக்காளி சாஸ், சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் வேக வைத்த மக்ரோனியை போட்டு ஒரு கிளறு கிளறி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மக்ரோனி பாஸ்தா தயார்.