ருசியான சப்பாத்தி குருமா இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 சப்பாத்தி சாப்பிடுவாங்க!

Summary: சப்பாத்தி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சப்பாத்திக்கு சைடிஷ் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா அப்போ ஒரு முறை இந்த மாறி சப்பாத்திக்கு குருமா செய்து பாருங்க. எதன்னை சப்பாத்தி சாப்பிட்டோம் என்றே கணக்கில்லாமல் ருசித்து சாப்பிடுவீங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 உருளைக்கிழங்கு
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் உருளை கிழங்கை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெந்ததும் அதனை மசித்து கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. கொஞ்சம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  5. 5 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும். இப்பொழுது சுவையான சப்பாத்தி குருமா தயார்.