கறி சுவையை மிஞ்சும் ரூசியான பன்னீர் கிரேவி செய்வது எப்படி ?

Summary: சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும் அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் கிரேவி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த சுவையான பன்னீர் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 200 கிராம் பன்னீர்
  • 4 tbsp எண்ணெய்
  • 2 பிரியாணி இலை
  • 1 துண்டு பட்டை
  • 3 ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • 1 வர மிளகாய்
  • 3 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 2 tbsp மல்லித்தூள்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 2 தக்காளி
  • 2 tbsp தயிர்
  • உப்பு
  • தண்ணீர்
  • கொத்த மல்லி
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 1 tbsp மிளகு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடைப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  2. அதன் பின் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்கு தாளிக்கவும். அதற்கடுத்து நாம் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நான்கு கிளறி விட்டு வதக்கவும்.
  4. பின்பு அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின் எடுத்து கொண்ட தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்து கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.
  5. அதன் பின் நன்றாக கிளறி விட்டு அதிகம் புளிப்பில்லாத தயிரை சேர்த்து கொள்ளவும் பின் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கிரேவியை நன்றாக கொதிக்க விட்டு மூடி விடவும்.
  6. அதன் பின் மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் சேர்த்து பொடியாக நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின் கிரேவி நன்றாக கொதித்தவுடன் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  7. அதன் பின் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிரேவியுடன் சேர்க்கவும். பிறகு எண்ணெய்யும் கிரேவியும் தனியாக பிரிந்து வந்ததும் கொத்தமல்லியை சிறுது தூவி விடவும் அவ்வளவுதான் சுவையான பன்னீர் கிரேவி.