கர்நாடகா நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். ஹோட்டல்களில் நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கிலோ நண்டு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • குழம்பு பொடி
  • உப்பு
  • 1 ஸ்பூன் பெப்பர்
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நண்டை சுத்தம் செய்து நன்கு கழுவி மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
  2. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கொஞ்சம் கொழைய வதக்கவும் வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. பிறகு கருவேப்பிலை சேர்த்து அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்து மகறிமசாலா தூள், மிளகாய் தூள், குழம்பு மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  5. 10 நிமிடம் கழித்து அதன் மேல் பெப்பர் தூவி அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தலைகளையும் தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது நண்டு மசாலா தயார்.