மதிய உணவை ருசியாக மாற்ற சுட சுட முட்டை ரைஸ் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Summary: குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் மதியம் என்ன சாதம் செஞ்சி கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. முட்டை சாதம் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாதம். அதனால் முட்டை சாதம் இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 10 பீன்ஸ்
  • கோஸ்
  • 1 கேரட்
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு பொடி
  • சாதம்
  • 3 முட்டை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை எண்ணெய் ஊற்றி நன்கு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு சாதத்தை உதிரி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
  3. அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கியதும் அத்துடன் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு மிளகாய் தூள், கறிமசாலா தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கிளறி வடித்து வைத்த சாதத்தை சேர்த்து அத்துடன் பொறித்த முட்டை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
  6. இப்பொழுது முட்டை ரைஸ் தயார்.