சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! கடையில் கூட இவ்வளோ ருசி இருக்காது!

Summary: அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லவா வேண்டும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல்களில் விற்கப்படும் சிக்கன் 65 தனி சுவை கொண்டது. ஆனால் அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் எப்படி வீட்டிலேயே சிக்கன் 65 செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 KG சிக்கன்
  • 2 பின்ச் மஞ்சள் பொடி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் சீரக பொடி
  • ½ ஸ்பூன் கறிமசாலா தூள்
  • உப்பு
  • 3 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 1 ஸ்பூன் அரிசி மாவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சீரக பொடி, கறிமசாலா பொடி, தேவையான அளவு உப்பு, கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  3. சிக்கன் ஊறியதும் அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சிக்கன் 65 தயார்.