சுட சுட மட்டன் பொடிமாஸ் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Summary: அசைவ உணவு என்றாலே கோழிக்கறி, ஆட்டுக்கறி அல்லது மீன் வகைகள் தான். ஒரு சிலர் கோழிக் கறியைத் தவிர்த்து ஆட்டுக்கறியை மட்டுமே வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். வித்தியாசமான முறையில் இவ்வாறு மட்டன் கீமா செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கைப் பக்குவமும் இருக்கும். அவ்வாறு ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். மட்டன் பொடிமாஸ் இந்து கொடுத்துள்ள பதிவில் உள்ளது போல் செய்து பாருங்கள் , ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள்.

Ingredients:

  • 1/4 KG மட்டன்
  • 1 வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 Tbsp சோம்பு, கசகசா
  • 3 பச்சை மிளகாய்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 1/4 Tbsp மல்லி தூள்
  • 1/2 Tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 4 Tbsp தேங்காய் எண்ணெய்
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 Tbsp எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி, கருவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. மட்டனை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதவlளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து மட்டனை நன்கு வேக வைக்கவும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதிலன எண்ணெய் ஊற்றி.
  2. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சோம்பு போட்டு சிவக்க வறுத்து, பின் கசகசா சேர்த்து லேசாக வதக்கி, பின் வறுத்த பொருட்களை குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
  3. அதன் பின் வேக வைத்த மட்டனில் (தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளவும்) பின் தேங்காய் பவுடர், அரைத்த பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து.
  4. இந்த கலவையில் வெந்த மட்டனிலிருந்து எடுத்த தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி,
  5. எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும், பட்டை, கிராம்பு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. அதன் பின் இதனுடன் மட்டன் கலவை – தேங்காய் துருவல் சேர்த்து நன்கு முறுவலாகும் வரை வதக்கி இறக்கவும். தனியாக ஒரு கடாயில் ஊற்றி சின்ன வெங்காயம் பொரித்து சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். மட்டன் பொடிமாஸ் தயார்.