தித்திக்கும் சுவையில் மைசூர் கேக் இப்படி செய்து!

Summary: மைசூர் கேக் என்றாலே எல்லோருக்கும் வாயில் எச்சில் ஊரும். 90ஸ் காலங்களில் மிகவும் பிரபலமானது இந்த மைசூர் கேக். சிறு சிறு கடைகளில் கூட விற்பார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் ஆசை பட்டாலும் சாப்பிட முடியாது ஏனென்றால் இப்பொழுதெலாம் கண்களில் கூட பார்ப்பதில்லை இந்த மைசூர் கேக். ஆனால் இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே சுலபமாக சட்டுனு எப்படி மைசூர் கேக் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 75 ml டால்ட்ட
  • 100 கிராம் கடலை மாவு
  • 200 கிராம் சர்க்கரை
  • 5 ml ரீபைண்ட் ஆயில்

Equipemnts:

  • 3 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு தட்டில் டால்ட்ட கொஞ்சம் சுற்றிலும் தடவி வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு வாணலில் கடலை மாவு போட்டு கை சூடு ஏறும் பதில் வறுத்து அதனை சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் பதம் வந்ததும். மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து கொள்ளுங்கள்.
  4. இதமான தீயில் காச்சிய 75 ml டால்ட்ட, மற்றும் ரீபைண்ட் ஆயில் ஊற்றி சர்க்கரை பாவு கைல் ஒட்டும் பதத்தில் வந்தவுடன் இதில் சலித்த கடலை மாவை சேர்த்து கட்டி படாமல் கை விடாமல் கிண்டவும்
  5. பிறகு சூடான எண்ணையை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும். அல்வா பதம் வரும் வரை கிண்டி டால்ட்ட தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி ஆறவிடவும்.
  6. லைட்டாக சூடு ஆறியதும் தேவையான வடிவில் கட் பண்ணவும்.
  7. இப்பொழுது ருசியான மைசூர் கேக் தயார்.