சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!

Summary: பருப்பு பொடி என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதுவும் ஹோட்டல்களில் சுட சுட சாதத்துடன் பருப்பு பொடி போட்டு அத்துடன் நெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நம் வீட்டிலேயே எப்படி பருப்பு பொடி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். சாதம் மட்டும் இருக்கு குழம்பு வைக்கவில்லையே என்று இனி கவலை படாதீங்க அட்டகாசமான சுவையில் பருப்பு பொடி அரைத்து சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

Ingredients:

  • 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டீஸ்பூன் சிறு பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் உடைத்த கடலை
  • கருவேப்பிலை
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதே வாணலில் ¼ டீஸ்பூன் நெய் விட்டு சிறு பருப்பு சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
  3. அதே வாணலில் ¼டீஸ்பூன் நெய் விட்டு பூண்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  4. அதே வாணலில் உடைத்த கடலை, மற்றும் கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து அதே வாணலில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
  6. கடைசியாக தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து வறுத்து அத்தனையும் எடுத்து வைக்கவும்.
  7. இப்பொழுது வறுத்து வைத்துள்ள அணைத்து பொருட்களும் நன்கு ஆறவிடவும்.
  8. ஆறியதும் மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  9. இப்பொழுது பருப்பு பொடி தயார்.