கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக்கறி இப்படி செய்து பாருங்க!

Summary: ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு! ரொட்டி ,சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு/தக்காளி ரசம்/மோர் /சாம்பார் உடன் சாப்பிடகூடிய விரைவான ரெசிபிகளில் இதுவும் ஒன்று! இந்த கத்தரிக்காயை பொடிக்கறி செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். இதை செய்ய 20 நிமிடங்களே ஆகும். சூடான ரொட்டி, சாதம் மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும். இது ஒரு சிறந்த சைட் டிஷ்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கத்தரிக்காய் பொடிக்கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 3 cup கத்தரிக்காய்
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 5 மிளகாய் வற்றல்
  • 1 tbsp கடலைப் பருப்பு
  • 2 tbsp துருவிய தேங்காய்
  • பெருங்காயத் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 3 நல்எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கத்தரிக்காய் பொடிக்கறி செய்ய முதலில் நறுக்கிய கத்தரிக்காயுடன் சிறிது தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து, 5 நிமிடங்கள் மூடிய வாணலிலில் வேக விட வேண்டும்.
  2. பருப்புகள், மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
  3. கத்தரிக்காயில் தண்ணீர் சுண்டி விட்டு, கத்தரிக்காய் வெந்து வரும் போது மிக்சியில் பொடித்த கலவையும், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து, திறந்த பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து இறக்க வேண்டும்.சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி ரெடி.