வெயிலுக்கு இதமா குளு குளுனு வாழைப்பழ ஸ்மூத்தி இப்படி செய்து பாருங்க!

Summary: பழங்கள் ஜூஸ் போட்டு கொடுப்பதற்கு பதிலாக ஸ்மூத்தி செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.ஸ்மூத்தி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பழங்கள் சமர்ப்பி என்றால் ஸ்மூத்தி பிரியமாக இருப்பார்கள் பழங்களில் சுவையானது வாழைப்பழத்தை ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழ ஸ்மூத்தி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 1 cup பழுத்த வாழைப்பழத் துண்டுகள்
  • 5 பிஸ்தா
  • 6 முந்திரி பருப்புகள்
  • 10 உலர் திராட்சை
  • 1 tbsp தேன்
  • 1 cup கொழுப்பு பால்
  • ½ cup தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. வாழைப்பழ ஸ்மூத்தி செய்ய முதலில் நறுக்கிய வாழைப்பழத்தை 20 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும் .
  2. அதன் பிறகு ஊறவைக்க ஒரு பாத்திரத்தில் பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின்னர் குளிரூட்டப்பட்ட வாழைப்பழ துண்டுகள், தேன் மற்றும் ஊறவைத்த பொருட்களை ஒரு பிளெண்டரில் சேர்க்கவும்.
  4. வாழைப்பழ ஸ்மூத்தி நன்றாக பேஸ்ட் போல் மென்மையாக கலக்கவும்.
  5. இப்போது பாலில் சேர்த்து கலக்கவும். 30 வினாடிகள்வாழைப்பழ ஸ்மூத்திஸ்மூத்தியை பரிமாறும் கிளாஸில் ஊற்றவும்.
  6. சிறிது பிஸ்தா/பேட்ஸுடன் பானத்தை பரிமாறவும். ஐஸ் தேவை படுபவர்கள் ஐஸ் சேர்த்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி.