இட்லி, தோசைக்கு ஏற்ற காலிப்ளவர் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: நிறைய பேருக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் காலிபிளவரை வைத்து குருமா செய்தால் பச்சை வாசனை இருக்கும் என்று சிலர் குருமாவை செய்வதில்லை. சிலருக்கு பக்குவமாக குருமாவை வைக்க தெரியாது. உடலுக்கு அதிகப்படியான நார்ச்சத்துக்கள் அடைகியுள்ள இந்த காலிபிளவரை வைத்து சுலபமாகவும், சுவையாகவும் எப்படி காலிபிளவர் குருமா செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம்.

Ingredients:

  • 1 காலிபிளவர்
  • 50 கிராம் பச்சைபட்டாணி
  • 2 கேரட்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • இஞ்சி
  • 1 பூண்டு
  • 1 மூடி தேங்காய்
  • 5 பச்சைமிளகாய்
  • ½ ஸ்பூன் சோம்பு
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 பட்டை
  • 1 பிரிஞ்சி இழை
  • கறிவேப்பிலை
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காலிபிளவரை உப்பு கலந்த கொதித்த நீரில் போட்டு எடுக்க வேண்டும்.
  2. வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், கேரட், நறுக்கிக்கொள்ளவும்.
  3. தேங்காய், பச்சை மிளகாய், கசகசாவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இழை போட்டு தாளிக்கவும்.
  5. பின் வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பட்டாணி, காலிபிளவர், போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. நன்கு கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மல்லி தழை கிள்ளி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
  7. இப்பொழுது சுவையான காலிபிளவர் குருமா ரெடி.