சுவையான கருவாட்டு தொக்கு இப்படி செய்து பாருங்க! சோறுடன் வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கருவாடு தொக்கு எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். அசைவ பிரியர்களுக்கு கருவாடு என்றாலே தனி பிரியம் உண்டு. அதிலும் கருவாடு ப்ரை, கருவாடு தொக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ரசம் சாதம், மற்றும் சுட சுட சத்தத்துடன் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.

Ingredients:

  • 100 கிராம் துண்டு கருவாடு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • கருவேப்பிலை
  • உப்பு
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி கொஞ்சம் கொலைய வதங்கியதும் கழுவி சுத்தம் செய்துள்ள கருவாடு துண்டுகளை சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி கொஞ்சம் தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
  3. 5 நிமிடம் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  4. கருவாட்டை நன்கு தண்ணீரால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.