அடிக்கடி சாப்பிட தூண்டும் சுவையாள பாஸ்தா செய்வது எப்படி ?

Summary: உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்து சாப்பிடலாம். ஆம் இன்று அந்த பாஸ்தாவே இப்படி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்த மாதிரி செய்வது என்று தான் பார்க்கபோகிறோம். இப்படி நீங்கள் பாஸ்தா செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி செய்து தர சொல்லி அடம் பிடிப்பார்கள். மிகவும் சுவையான பாஸ்தா ரெசிபி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 1 கப் பாஸ்தா
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 கேரட்
  • ½ குடைமிளகாய்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 ½ tbsp மிளகாய்த் தூள்
  • உப்பு
  • ¼ tbsp மிளகுதூள்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் நாம் எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு பாஸ்தாவை தனியாக வடிகட்டி எடுக்கவும். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை சூடு ஏறியதும் சிறு சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மட்டும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
  3. அதன்பின்பு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும்.
  4. பின்பு நாம் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் கேரட் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். ஐந்து நிமிடம் கடாயை மூடி வைத்து நன்கு காய்கறிகள் வேக விடவும்.
  5. காய்கறிகள் வெந்தவுடன் கரம் மசாலா, மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும் அதன் பிறகு பாஸ்தாவையும் சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள் பாஸ்தாவும் நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  6. பின் கடைசியில் சிறிது மிளகு பொடியையும்= பொடி பொடியாக வெட்டிய கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான பாஸ்தா இனிதே தயாராகிவிட்டது.ே