கமகமக்கும் ருசியான சோளம் அடை இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

Summary: இன்று நாம் நாட்டு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று தான் பார்க்க போகிறோம். பொதுவாக நம் வீடுகளில் எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை மட்டும் அடிக்கடி செய்வதற்கு பதில் இப்படி நாட்டுச் சோள அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். மேலும் நாட்டு சோளத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாராளமாக சாப்பிட கொடுக்கலாம். இதில் சுவைக்கும் பஞ்சம் இருக்காது.

Ingredients:

  • 2 பிஞ்சி சோள கருது
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு
  • காஞ்ச மிளகாய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சோளத்தை உரித்து நன்கு கழுவி மிக்சியில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கோர கொரப்பாக அரைத்த மிளகாய், பச்சரிசி மாவு, சோம்பு, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்கு அடைமாவு பதத்திற்கு கலந்துவைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடை போல் மாவை போட்டு தட்டி இரு பக்கமும் வெந்து சிவந்ததும் அடுப்பை நிறுத்தவும்.