பால் கடம்பு இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

Summary: மாடு கன்று போட்டால் தான் சீன்பால் கிடைக்கும் அதை வாங்கி வீட்டிலே காய்த்து சீம்பால் சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் விருப்பம் படும் பொழுது சீம் பால் கிடைக்காது. இப்பொழுதெல்லாம் ரோட்டோர கடைகளில் இது போன்று பால் கடம்பு என்று விற்கப்படுகிறது, ஆனால் சிலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. அந்த பால் கம்பும் சீம் பால் மரியே மிகவும் சுவையாக இருக்கும். அதை வீட்டிலேயே சுலபமாக 3 பொருட்களை வைத்து எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.

Ingredients:

  • ½ லிட்டர் பால்
  • 5 கிராம் அகர் அகர் பாசி
  • 100 கிராம் சர்க்கரை
  • 100 கிராம் பால் பவுடர்

Equipemnts:

  • 1 பாத்திரம்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் சேர்க்காமல் பால் மட்டும் ஊற்றி பொங்கி வந்ததும் கரண்டியால் கிண்டி விடவும்.
  2. பிறகு மிதமான தீயில் அதில் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கைவிடாமல் கிண்டி விடவும்.
  3. பிறகு அகர் அகர் பாசி மற்றும் பால் பவுடர் சேர்த்து கரையும் வரை கைவிடாமல் கிண்டிவிடவும்.
  4. மிதமான தீயில் சிறிது நேரம் கிண்டி தடுப்பு பதம் அதாவது நிறம் மாறி கொல கொலனு வந்ததும் ஒரு டம்ளரில் சுற்றிலும் நெய் தடவி பாலை ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்