குழி ஆம்லெட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ரூசி தான்!

Summary: குழி ஆம்லெட் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் இது முட்டையில் செய்வதாகும். குழந்தைகளுக்கு இந்த குழி ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அது மட்டும் அல்லாமல் மீண்டும் எப்பொழுது செய்விக்கனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த குழி ஆம்லெட் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் கறிமசாலா பொடி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கோஸ்
  • 1 கேரட்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • மிளகு தூள்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் கேரட் மற்றும் கோஸை துருவிக்கொள்ளவும், பிறகு பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி, கறிமசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து 4 முட்டைகளை உடைத்து ஊற்றி அத்துடன் காரத்திற்கேற்ப மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து விஸ்க் வைத்து நன்கு கலந்துகொள்ளவும்.
  2. பிறகு பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கலந்துவைத்துள்ள கலவையை கரண்டியால் எடுத்து ஒவொரு குழியிலும் ஊற்றவும்.
  3. சுற்றிலும் வெந்து சிவந்ததும் அடுப்பை நிறுத்தவும்.