மதிய உணவுக்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க!

Summary: உருளைக்கிழங்கு வறுவல் பலவகையில் செய்து சாப்பிட்ருப்பிங்க. ஆனால் இந்த மாறி உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.இந்த வறுவலை செஞ்சி தயிர் சாதம், புளிசாதம், சுட சுட சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 5 உருளைக்கிழங்கு
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் கடலை பருப்பு
  • கருவேப்பிலை
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1¼ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அகலமான பான் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெட்டி வைத்துள்ள உருளை கிழங்கை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிடவும்.
  2. முக்கால் பதம் வெந்ததும் சீரக தூள், மிளகு தூள், தனியா தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.