பச்சை மிளகாய் சிக்கன் ப்ரை இப்படி செய்து பாருங்க ? ஆஹா இதன் சுவையே தனி தான்!

Summary: நீங்கள் அசைவ பிரியர்களை? நீங்கள் காரம் அதிகம் விரும்புவீர்களா? அப்போ இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி சுலபமாக செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்த முறையும் இது போன்று காரசாரமான மிளகாய் சிக்கன் செய்து தர சொல்லி வற்புறுத்துவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறுவென்று அட்டகாசமான சுவையில் இருக்கும்

Ingredients:

  • 1 கிலோ சிக்கன்
  • 2½ தேக்கரண்டி மிளகாய் தூள்
  • ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • ½ பலம் எலுமிச்சை
  • ¼ தேக்கரண்டி கலர் பொடி
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • உப்பு

Steps:

  1. முதலில் காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
  2. சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அணைத்து பொடிகளையும், பச்சை மிளகாய் விழுது, காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
  3. 1 மணிநேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
  4. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. இப்பொழுது சுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.