ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Summary: குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்டரால், சோடியம், ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைக்க விரும்புவார்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நல்ல பயனளிக்கும். அதுமட்டும் அல்லாமல் இந்த ரெசிபியை சுலபமாகவும், விரைவாகவும் செய்து விடலாம். காலையில் எழுந்து குழந்தைகளுக்கு லன்ச் செய்து ஸ்கூல்க்கு அனுப்புவதில் தாமதமானால் உடனே இந்த ரெசிபியை செய்து கொடுத்து விடுங்கள்.

Ingredients:

  • 200 கிராம் அரிசி
  • 2 குடமிளகாய்
  • 2 பெரியவெங்காயம்
  • பெப்பர்
  • கொத்தமல்லி
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய வெங்காய, இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வேக வைத்த சாதத்தையும் அதில் சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு பெப்பர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
  5. கடைசியாக சாதத்தின் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது ருசியான கேப்சிகம் ரைஸ் ரெடி.